YouTube அறிமுகப்படுத்தும் புதிய Share Clips வசதி !

கூகுள் நிறுவனத்தின் வீடியோ பகிர்வு தளமான யூடியூப், புதிய ஷேர் கிளிப்ஸ் வசதியை பயனர்களுக்காக கொண்டுவர உள்ளது. இந்த வசதி தற்போது சில பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் சோதனைக்காக ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது.



கூகுள் தலைமையின் கீழ் செயல்படும் யூடியூப் தளம், உலகளவில் பல கோடிப் பயனர்களைக் கொண்டதாகும். இதில், பல லட்சத்துக்கும் அதிகமான வீடியோ கிரியேட்டர்களும் உள்ளனர். கூகுள் நிறுவனத்தின் விளம்பரங்கள் (AdSense) மூலம் இவர்கள் நல்ல வருமானமும் ஈட்டி வருகின்றனர்.


அந்தவகையில், பல புதிய அம்சங்களைப் பயனர்களுக்காக யூடியூப் அறிமுகம் செய்துவருகிறது. தற்காலத்தில் முளைத்த டிக்டாக் செயலியுடன் நேரடி போட்டியில் இருக்கும் YouTube பயனர்களைத் தக்கவைத்துக் கொள்ள இந்த புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.




யூடியூப்-இல் இது புதுசு

தற்போது, Share Clips எனும் புதிய வசதியைப் பயனர்களுக்காக யூடியூப் அறிமுகம் செய்துள்ளது. பீட்டா பயனர்களுக்கு மட்டுமே இந்த வசதி சோதனை முயற்சியாக வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்தி, 60 நொடிகளுக்கு வீடியோ கிளிப்பிங்குகளை பயனர்கள் நறுக்க முடியும்.




இன்னும் கொஞ்சம் விவரமாகச் சொல்ல வேண்டும் என்றால், நீங்கள் ஒரு காணொலியைக் கண்டு களித்துக் கொண்டிருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதில் இருக்கும் ஒரு குறுகிய பகுதி மட்டும் உங்களுக்குப் பிடித்திருக்கிறது. அதை மட்டும், உங்கள் நண்பர்களுடன் பகிர, மூன்றாம் தரப்பு தளத்தை நாட நேரிடும்.

யூடியூப் ஷேர் கிளிப்

இந்த குறையை புரிந்து கொண்ட யூடியூப் 'Clip' எனும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்தி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வீடியோவில் வரும் உங்களுக்கு பிடித்தமான பகுதியை 60 நொடி கிளிப்பாக நறுக்கி நண்பர்களுக்குப் பகிரலாம்.






No comments

Search This Blog

Powered by Blogger.