மலிவு விலையில் boAt ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் - விலை ரொம்ப கம்மி!

இந்திய சந்தையில் குறைந்த விலையில் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகிறது. இப்போது நிறுவனம் அதன் மலிவான ஸ்மார்ட்வாட்ச் Boat Wave Lite -ஐ இந்திய டெக் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. போட் நிறுவனம் கடந்த வாரம் அதன் சமீபத்திய ஸ்மார்ட்வாட்சை குறித்து டீஸ் செய்திருந்தது.




இப்போது, Amazon India தளத்தில் போட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஸ்மார்ட்வாட்சின் விலை மற்றும் விவரங்கள் வெளியாகி உள்ளது. boAt இன் புதிய ஸ்மார்ட்வாட்சின் விலை ரூ.2,000க்கும் குறைவாக விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாட்சின் அசல் விலை ரூ.6,990 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அமேசான் இந்தியா ஷாப்பிங் தளத்தில் இருந்து இந்த ஸ்மார்ட்வாட்சை மார்ச் 31 ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்வாட்ச் டீப் ப்ளூ, ஸ்கார்லெட் ரெட், ஆக்டிவ் ப்ளாக் ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

போட் வேவ் லைட் சிறப்பம்சங்கள்

போட் வேவ் லைட் 1.69" இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே உடன் வருகிறது. இது 550nits வரை பிரைட்னஸை ஆதரிக்கிறது. ஸ்மார்வாட்ச் 160 டிகிரி கோண பார்வைத் தெளிவையும், 70% RGB நிறத்தையும் வழங்குகிறது. கையில் கட்டும் போது மிகவும் இலகுவாக இருக்கும்படி இந்த ஸ்மார்ட்வாட்ச் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் பயனாக வாட்சின் மொத்த எடை வெறு, 44.8 கிராம் தான் உள்ளது.





மெனுவை அணுகுவதற்கும், வாட்சின் பயன்பாடுகளை கையாளவும் பக்கவாட்டில் வட்ட வடிவிலான கிரவுண் கொடுக்கப்பட்டுள்ளது. சாதாரண கைகடிகார லுக்கை தரும் இந்த ஸ்மார்ட்வாட்ச், பல ஸ்மார்ட் வேலைகளை செய்ய உதவுகிறது. போட் வேவ் லைட் 100க்கும் மேற்பட்ட வாட்ச் முகப்பு ஆதரவுடன் வருகிறது.

இந்த வாட்ச் முகப்பை boAt ஸ்மார்ட்வாட்சுக்கான செயலி மூலம் பதிவிறக்கம் செய்து மாற்றி வைத்துக் கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்வாட்சில் இன்னும் பல உடலியல் கண்காணிப்பு அம்சங்கள் உள்ளன. இது நம்மை எப்பொழுதும் ஆக்டிவாக, நலமுடன் இருக்க உதவுகிறது.





வாட்ச் வேவ் லைட் பாதுகாப்பு அம்சங்கள்

இது 24/7 இதய துடிப்பு கண்காணிப்பு, இரத்த ஆக்ஸிஜன் அளவு மற்றும் தூக்க கண்காணிப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. உடற்தகுதியை மேம்படுத்த பத்து விளையாட்டு முறைகளை இந்த வாட்ச் ஆதரிக்கிறது. ஓட்டம், நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், யோகா, கால்பந்து, பூப்பந்து, கூடைப்பந்து, ஸ்கிப்பிங், மலையேற்றம், நீச்சல் ஆகிய விளையாட்டுகள் இதில் அடங்கும்.

  • போட் வேவ் லைட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்
  • மார்ச் 31 முதல் அமேசானில் கிடைக்கிறது
  • இந்த கடிகாரத்தின் விலை வெறும் ரூ.1,999 தான்

No comments

Search This Blog

Powered by Blogger.