வெறும் ரூ.7xx-க்கு அட்டகாசமான ஸ்மார்ட் டிவி: அசத்தும் Flipkart விற்பனை

பிப்ரவரி 23 முதல் பிளிப்கார்டில் சிறப்பு பிளிப்கார்ட் எலக்ட்ரானிக்ஸ் விற்பனை நடைபெறுகிறது. இதில் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட் டிவி-கள் மற்றும் மடிக்கணினிகள் போன்ற அனைத்து மின்னணு சாதனங்களிலும் பெரும் தள்ளுபடியைப் பெறுவார்கள். இன்று இந்த பதிவில் காணப்போகும் ஸ்மார்ட் டிவி டீல் ஒரு அற்புதமான டீலாகும். இந்த டீலின் சலுகைகள் நம்ப முடியாத வகையில் அற்புதமாக உள்ளன. 

பிளிப்கார்டின் இந்த டீலின் கீழ், ரூ.800க்கும் குறைவான விலையில் 3டி சவுண்ட் கொண்ட ஸ்மார்ட் டிவியை வாங்கலாம். இவ்வளவு குறைந்த விலையில், மிக நல்ல அம்சங்கள் கொண்ட இந்த டிவி-ஐ எப்படி வாங்குவது என இந்த பதிவில் காணலாம். 

3டி ஒலியுடன் கூடிய ஸ்மார்ட் டிவிகளில் பெரும் தள்ளுபடி

இந்த டீலில், ஃபிளிப்கார்ட் எலக்ட்ரானிக்ஸ் விற்பனையில், ரூ.22,990 விலை கொண்ட Acer Boundless Series 80 cm (32 inch) HD Ready LED Smart Android TVயை 43% தள்ளுபடிக்குப் பிறகு 12,999 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த டிவி-ஐ வாங்கும் போது, ​​ஐடிஎஃப்சி வங்கியின் கிரெடிட் கார்ட் கொண்டு பணம் செலுத்தினால், 10% அதாவது ரூ.1,235, உடனடி தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் டிவியின் விலை ரூ.11,764 ஆகக் குறையும். 

மேலும் படிக்க | பிளிப்கார்ட் விற்பனை! 55 இன்ச் ஸ்மார்ட் டிவியை 17 ஆயிரத்தில் வாங்கலாம் 



இந்த வழியில் ரூ.800க்குள் டிவி-ஐ வாங்கலாம்

Acer Boundless Series 80 cm (32 inch) HD Ready LED ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியை ரூ.800க்கும் குறைவாக வாங்குவது எப்படி என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருந்தால், பிளிப்கார்ட் இந்த டீலில் உங்களுக்கு ஒரு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரையும் வழங்குகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட் டிவிக்கு பதிலாக இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கினால், ரூ.11,000 வரை சேமிக்க முடியும். மேலும் இந்த சலுகையின் முழுப் பலனையும் வாடிக்கையாளர்கள் பெற்றால், இந்த ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.11,764லிருந்து வெறும் ரூ.764 ஆகக் குறையும். 

இந்த ஸ்மார்ட் டிவியின் சிறப்பம்சம் என்ன ?

ஏசர் பவுண்ட்லெஸ் சிரிஸ் 80 செமீ (32 இன்ச்) எஹ்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி, ஆண்ட்ராய்டில் வேலை செய்யும் ஒரு ஸ்மார்ட் டிவி ஆகும். இதில் 32 இன்ச் டிஸ்ப்ளே, எச்டி ரெடி மற்றும் 1,366 x 768 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 60ஹட்ர்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆகியவை உள்ளன. 

இதில் வாடிக்கையாளர்களுக்கு 24வாட் சவுண்ட் அவுட்புட், 3டி டால்பி சவுண்ட் வசதி மற்றும் நெட்ஃபிளிக், அமேசான் ப்ரைம் வீடியோ மற்றும் யுடியூப் போன்ற செயலிகளுக்கான ஆதரவு ஆகியவையும் கிடைக்கும். 

ஃபிளிப்கார்ட் எலக்ட்ரானிக்ஸ் சேல் பிப்ரவரி 28 வரை தொடரும் என்பதை வாடிக்கையாளர்கள் நினைவில் கொள்ள வெண்டும். 

மேலும் படிக்க | Tecno Spark 8C அறிமுகம்: ரூ.8,000-ஐ விட குறைந்த விலை, அசத்தும் அம்சங்கள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

No comments

Search This Blog

Powered by Blogger.