டெலிகிராமில் உள்ள சிறப்பம்சங்கள் (TELEGRAM)



வணக்கம் நண்பா! இன்னக்கி நம்ம வாட்சப்பிற்கு மாற்றாக இருக்கும் அப்ளிகேஷன்களில் சிறப்பானதாக இருக்கும் டெலிகிராமின் சிறப்பம்சங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

குரூப்ஸ் :

நீங்கள் நிறைய குரூப்களில் உள்ளீர்கள் என்றால் அதனை தனியே பிரித்து அதெற்கென தனியே பெயர்வைத்துக்கொள்ளலாம். அதாவது டெக் சம்மந்தப்பட்ட குரூப்களை தனியே பிரித்துக்கொள்ளலாம். அதனைப்போன்று அணைத்து விதமான குரூப்களையும் அதெற்கென தனியே பிரித்து பெயர்வைத்துக்கொண்டால் தேவையானவற்றை எளிதில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

மெசேஜ் எடிட் :

நீங்கள் அனுப்பிய மெசேஜ் எழுத்துப்பிழையுடன் அனுப்பிவிடீர்கள் என்றால் அதனை எடிட் செய்துகொள்ளமுடியும்.

சைலன்ட் மெசேஜ் :

இந்த வசதியின் மூலம் ஒருவருக்கு அனுப்புகின்ற மெசேஜிற்கு எந்த ஒரு அறிவிப்போ அல்லது சத்தமோ வராது. இந்த வசதி டெலெக்ராமில் மட்டுமே உள்ளது.

இதனை எவ்வாறு செய்வது என்று பாப்போம், ஒருவருக்கு என்ன மெசேஜ் அனுப்ப வேண்டுமோ அதனை டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை மூன்று வினாடிகளுக்கு அழுத்தி பிடித்தால் (send without sound) என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள் இவ்வாறு அனுப்பப்படும் மெசேஜிற்கு எந்த ஒரு நோட்டிபிகேஷனும் காட்டப்படாது.

டைமிங் மெசேஜ் :

மெசேஜ் டைப் செய்த பிறகு சென்ட் பட்டனை மூன்று வினாடிக்கு அழுத்தி (schedule message) என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள் மேலும் அதில் எப்போது மெசேஜ் செல்லவேண்டும் என்பதை தேர்வு செய்தால் குறிப்பிட்ட நேரத்திற்கு அந்த மெசேஜ் சென்றடையும்.

மெசேஜ் திரும்பப்பெறுதல் :

ஒருவருக்கு நீங்கள் அனுப்பிய மெசேஜை அழுத்தினால் மேலே வலதுபுறம் தோன்றும் டெலீட் பட்டனை அழுத்தினால், மெசேஜ் உங்களுக்கு மட்டும் அழிய வேண்டுமா அல்லது மெசேஜை பார்த்தவருக்கும் அழிய வேண்டுமா என்பதை தேர்வு செய்தால் அனுப்பிய அடையாளம் கூட தெரியாமல் அழிந்துவிடும்.

குறிப்பிட்ட நேர பதிவு :

நீங்கள் ஒருவருக்கு போட்டோ அனுப்ப வேண்டும் அதேநேரம் அந்த போட்டோ குறிப்பிட்ட நேரத்தில் அழிந்துவிட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இந்த வசதி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஒரு போட்டோவை தேர்வு செய்தபின் கீழே காட்டும் கடிகார சின்னத்தை கிளிக் செய்தால் கொடுக்கப்பட்டிருக்கும் தேர்வில் ஒன்றை தேர்வு செய்தால் அந்த நேரத்திற்குள் அந்த பதிவில் பதிவு அழிந்துவிடும்.



எடிட் வீடியோ :

அனுப்ப நினைக்கும் விடியோவை தேர்வு செய்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் எடிட் செய்யும் வசதியை கிளிக் செய்தால் உங்களால் அந்த விடியோவை சிறிதளவு மாற்றம் செய்துகொள்ள முடியும்.

காப்பி மெசேஜ் :

ஒரு பத்து வரி ஒரு கொண்ட பதிவில் குறிப்பிட்ட ஒரு வரியை எளிதாக தேர்வு செய்துகொள்ள முடியும்.

யூடுயூப்(youtube) :

மெசேஜ் டைப் செய்யும் இடத்தில் @YOUTUBE TECHMARVELS என்று டைப் செய்தால் நமது யூடுயூப் சேனலை எளிதாக பார்க்க முடியும்.

போட்டோ :

நீங்கள் நல்ல தரம் உள்ள ஒரு போட்டோவை ஒருவருக்கு அனுப்பவேண்டும் என்றால் போட்டோவை தேர்வு செய்யும்போது மேலே வலது பக்கத்தில் send without compression என்ற ஆப்ஷனை தேர்வு செய்வதன் மூலம் முழு தரத்தில் போட்டோவை அனுப்ப முடியும்.

தெரியாத நபர் குரூப்பில் சேர்ப்பதை தவிர்ப்பதற்கு :

செட்டிங்ஸ் ஆப்ஷனில் குரூப்ஐ தேர்வு செய்து my contacts ஆப்ஷனை தேர்வு செய்வதன் மூலம் நீங்கள் மொபைல் நம்பர் வைத்திருக்கும் நபர்களை தவிர வேறு யாராலும் உங்களை குரூப்பில் சேர்க்க முடியாது.


கலர் மாற்றுவது போன்று இன்னும் பல வசதிகள் உள்ளன, மேலே குறிப்பிட்டுள்ள வசதிகளே சிறந்த வசதிகளாகும்.

மேலும் இது போன்ற டெக் செய்திகளை தெரிந்துகொள்ள TECH MARVELS -வுடன் இணைந்திருங்கள்.



No comments

Search This Blog

Powered by Blogger.