How To Set Password In Pendrive Without Any Software Tutorial #pendrive ...

அனைத்து வகையான டிஜிட்டல் தரவையும் சேமிக்க பென் டிரைவ்கள் மிகவும் பயன்படுகின்றன. வழக்கமாக நாம் தனிப்பட்ட தகவல்கள், அலுவலக தகவல்கள் என அனைத்தையும் பென் டிரைவில் சேமித்து வைக்கிறோம். ஆனால் பல கணினிகள், மடிக்கணினிகள், ஹார்ட் டிஸ்குகளில் இந்த பென் டிரைவைப் பயன்படுத்தும்போது, ​​அதன் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், உங்கள் அனுமதியின்றி உங்கள் தனிப்பட்ட தரவை யாரும் பார்க்கக்கூடாது என நீங்கள் எண்ணினால், சில எளிய வழிகள் மூலம் நீங்கள் உங்கள் தரவுகளைப் பாதுகாக்கலாம். ஆம்!! நீங்கள் உங்கள் பென் டிரைவை லாக் செய்யலாம். இதன் மூலம், உங்கள் பென் டிரைவின் தரவும் பாதுகாப்பாக இருக்கும், வேறு யாரும் அதை உபயோகிக்க முடியாது. பென் டிரைவில் (Pen Drive) கடவுச்சொல்லை அமைக்க மென்பொருள் அல்லது தனிப்பட்ட செயலில் என எதுவும் தேவையில்லை. USB பென் டிரைவில் கடவுச்சொல்லை எவ்வாறு அமைப்பது என்பதை இங்கே பார்க்கலாம்.

இந்த 5 எளிய வழிகளில் நீங்கள் பென் டிரைவில் பாஸ்வர்டை செட் செய்யலாம்:

Step 1


முதலில், உங்கள் USB Pen Drive ஐ உங்கள் கணினியில் செருகவும். இதற்குப் பிறகு, டிரைவில் வலது கிளிக் செய்யவும். பின்னர், ‘Turn on BitLocker’ஐ செலக்ட் செய்யவும்.




 


Step 2

இப்போது 'Use Password to protect the Drive’-ல் கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு, நீங்கள் நினைவில் வைக்க எளிதான ஒரு பாஸ்வர்டை (Password) உள்ளிடவும். இந்த பாஸ்வர்டை இரு ஃபீல்டுகளிலும் உள்ளிடவும்.

Step-3

'Save the key for future reference’ என்ற செய்தி வரும் வரை ‘next’ பட்டனை அழுத்தியபடி இருக்கவும்.

Step-4

இப்போது குறியாக்க செயல்முறை (Encryption Process) தானாகவே தொடங்கும். இதற்குப் பிறகு, நீங்கள் அமைத்த பாஸ்வர்ட் மூலம் உங்கள் PenDrive பாதுகாக்கப்படும்.

Step-5

பாஸ்வர்ட் அமைத்த பிறகு அதை எங்காவது எழுதி வைத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் பாஸ்வர்டை மறந்து விட்டால், அதைப் பார்த்து நினைவு படுத்திக் கொள்ளலாம். 

No comments

Search This Blog

Powered by Blogger.